ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2024 01:04
ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று, கருடசேவை உற்சவம் நேற்று நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, சித்திரை மாதம் பிரம்மோற்சவ உற்சவம், ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் காலை சேஷ வாகனம், மாலை ஹம்ச வாகனத்தில் விதியுலா நடந்தது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை 5:00 மணிக்கு கருட சேவை, மாலை ஹனுமந்த வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் விதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.