பதிவு செய்த நாள்
11
அக்
2026
12:10
புதுச்சேரி: புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில், 52ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள், மகாசண்டி ஹோமம் சிறப்பு பூஜையை முன்னிட்டு நேற்று மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் 52ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் இன்று (11ம் தேதி) துவங்கி வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.
அதையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு குரு கலாேஷத்ரம் குழுவினரின் பாட்டு வாத்தியம், இரவு 7:00 மணிக்கு சாரதா கலாமந்திர் இசை நாட்டிய பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.
இன்று காலை 8:00 மணி முதல் 10:30 வரை யாக சாலைப்ரவேசம், விக்னேஸ்வர பூஜை, ரக்ஷாபந்தனம், கலசஸ்தாபனம், வாஸ்து சாந்தி, ரித்விக்வர்ணம், மாத்ருகா பூஜை, 10:30 மணி முதல் 12:30 மணி வரை ஆவஹந்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மகா கணபதி ஹோமம் நடக்கிறது.
நாளை காலை 8:00 மணிக்கு மகா ருத்ர ஹோமம், 10:30 மணிக்கு சுயம்வராபார்வதி ஹோமம் (கந்தர்வ ராஜ ஹோமம்), 13ம் தேதி காலை 8:00 மணிக்கு துர்க்கா சூக்த ஹோமம், 10:30 மணிக்கு காயத்திரி ஹோமம், 14ம் தேதி காலை 8:00 மணிக்கு ஹயக்ரீவ ஹோமம், 10:30 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், 15ம் தேதி காலை 8:00 மணிக்கு சுப்ரமண்ய ஷடாக்ஷரி ஹோமம், 10:30 மணிக்கு நவக்கிரஹ மிருத்யுஞ்ஜய ஹோமம் நடக்கிறது.
16ம் தேதி காலை 8:00 மணிக்கு சூக்த ஹோமம், 10:30 மணிக்கு அஷ்ட லஷ்மி ஹோமம், 17ம் தேதி காலை 8:00 மணிக்கு தன்வந்திரி ஹோமம், 10:30 மணிக்கு ஆஞ்ஜநேயர் ஹோமம், 18ம் தேதி காலை 8:00 மணிக்கு அதிஷ்டானத்தில் ஆராதனை நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, வரும் 19ம் தேதி காலை 7:30 மணிக்கு மகாசண்டி ஹோமம், 20ம் தேதி சாரதாம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை இசை கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.