ஆழ்வார்குறிச்சி கோயிலில் இன்று ஐப்பசி திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2012 10:11
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் சிவகாமியம்பாள் கோயிலில் இன்று (2ம் தேதி) ஐப்பசி திருக்கல்யாணம் நடக்கிறது. ஆழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் வன்னியப்பர் சிவகாமியம்பாள் கோயில் உள்ளது. மிகவும் தொன்மை வாய்ந்த இக்கோயில் தற்போது சிவபக்தர்களால் சீரமைக்கப்பட்டு பிரதோஷம், நந்தி களபம் மற்றும் முக்கிய விஷேசங்கள் நடந்து வருகிறது. இன்று (2ம் தேதி) காலை கணபதி ஹோமம், அதனை தொடர்ந்து ருத்ர ஏகாதசி, மகா அபிஷேகம் ஆகியன நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவமும், சிறப்பு ஜைகளும் நடக்கிறது. மாலை சுவாமி, அம்பாள் உற்சவர் வீதியுலா நடக்கிறது. பின்னர் சிறப்பு தீபாரதனையும், விசேஷ பூஜையும் நடக்கிறது.ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.