பதிவு செய்த நாள்
02
நவ
2012
10:11
திருக்கோவிலூர்: மேலந்தல் கிராமத்தில் உள்ள விநாயகர், முருகன், ஐயப்பன் கோவில்களுக்கு 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. மேலந்தல் கிராமத்தில் விநாயகர், பாலதண்டாயுதபாணி, ஐயப்பன், மாரியம்மன் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடக்கிறது. 3ம் தேதி காலை 10.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, நவகிரக ஹோமம், கோபூஜை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, ஹோமங்கள் நடக்கிறது. 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனையும், காலை 8 மணிக்கு தீபாராதனையும், 8.30 மணிக்கு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.