இரட்டை திருப்பதி தேவர்பிரான் கோயிலில் கார்த்திகை பிரம்மோத்ஸவ விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2012 10:11
தூத்துக்குடி: தொலைவில்லி மங்கலம் இரட்டைத்திருப்பதி தேவர்பிரான் கோயிலில் வரும் டிசம்பர் 7ம் தேதி கார்த்திகை பிரம்மோத்ஸவ விழா துவங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதிகளில் ஒன்றான தொலைவில்லிமங்கலத்தில் இரட்டை திருப்பதிகளில் ஒன்றான தேவர்பிரான் கோயிலில் கார்த்திகை பிரம்மோத்ஸவ திருவிழா டிசம்பர் 7ம் தேதி துவங்கிறது. தொடர்ந்து 12 நாட்கள் விழா நடக்கிறது. வரும் 7ம் தேதி பகல் 12 மணிக்கு மேல் 1.30க்குள் திருமுளைச்சாற்று நிகழ்ச்சியும், 8ம் தேதி காலை 9.30க்கு மேல் 10.30 மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து டிசம்பர் 18ம்தேதிவரை சுவாமி தோளுக்கினியான் ஒவ்வொரு வாகனத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. டிசம்பர் 12ம் தேதி சுவாமி தேவர்பிரான் கருட சேவை, சுவாமி அரவிந்தலோசன் சிறப்பு கருடசேவை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் தலைமையில் பலர் செய்து வருகின்றனர்.