திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் திருநாவுக்கரசர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2024 07:05
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் சைவ சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் குரு பூஜை விழா நடந்தது. மாலை ஆறு மணிக்கு நால்வர் சன்னதியில் அபிஷேக ஆராதனையுடன் நடந்த விழாவில் திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழ்வு, மகா தீபாராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஶ்ரீ வேலப்ப தேசிகர் கூட்டத்தினர் செய்திருந்தனர்.