Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ... புல்லுார் தடுப்பணையில் 3 அடி உயர அம்மன் சிலை; சிறுவர்கள் கண்டெடுத்தனர். புல்லுார் தடுப்பணையில் 3 அடி உயர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி மகா மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவிநாசி மகா மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

பதிவு செய்த நாள்

09 மே
2024
04:05

அவிநாசி; அவிநாசி கைகாட்டிப்புதூரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் மழை பெய்ய வேண்டி முளைப்பாரி எடுத்து அம்மன் பாடல் பாடி அழைத்து கும்மி அடித்தனர்.

அவிநாசி, கைகாட்டி புதூரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவில்,நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன் பிறகு மாலையில், கோவில் வளாகத்தில் 50ம் மேற்பட்ட பெண்கள் வறட்சி நீங்கி, பசுமை ஓங்க ஜீவராசிகள் தாகம் தணிக்க மழை பெய்ய வேண்டி அம்மன் பாடலை பாடி அழைத்து கும்மியடித்தனர். அதனைத் தொடர்ந்து, மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, பொங்கல் வைத்தல், கம்பம் பிடுங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 29ம் தேதி காப்பு கட்டுதல், 5ம் தேதி கம்பம் நடுதலுடன் பூச்சாட்டு விழா துவங்கியது. அதன் பின்னர் 7ம் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல், கரகம் எடுத்தல்,அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை மஞ்சள் நீராட்டுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவையொட்டி, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் வழிபாடு மன்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar