கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு கலசம் வைத்து, அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ண கவுரி விரதம் கடைப்பிடிக்கின்றனர். இதன் மூலம் பார்வதி தேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள். மணப்பேறு, மழலை பாக்கியம், சுமங்கலித்தன்மை, குடும்ப ஒற்றுமை, எல்லோரின் உடல் நலம் ஆகியன வேண்டி அவர்கள் இந்த விரதம் இருக்கிறார்கள். விரத முடிவில் இயன்ற அளவில் தானமும் வழங்குவர். அட்சய திருதியை நாளில் புதன்கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு. அப்படி வரும் நாளில் செய்யப்படும் தான தர்மங்கள் பலகோடி மடங்கு பலன் தரும்.