ராமேஸ்வரத்தில் கோயில் விடுதி முன்பு ஆக்கிரமிப்பு : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2026 10:03
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயில் ரதவீதியில் பக்தர்களுக்கு ஓய்வு கூடம் இல்லாததால், தனியார் விடுதியில் கூடுதல் செலவீனத்துடன் தங்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே சன்னதி தெருவில் ஓய்வு கூடம் மற்றும் காலணிகள் வைக்கும் ஸ்டான்ட் அமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் ஓய்வு கூடம் முன்பு அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் டூவீலர்களை நிறுத்தியும், பிச்சைக்காரர்கள் அமர்ந்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பக்தர்கள் ஓய்வு கூடத்திற்குள் சென்று வர, காலணிகளை வைக்க பெரிதும் அவதிப்படுகின்றனர். சில சமயம் ஆக்கிரமிப்பு டூவீலர்களுக்குள் பக்தர்கள் சிக்கி காயமடைந்தும், பிச்சைக்காரர்களுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு டூவீலர்கள், பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த ஹிந்து அமைப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே ஓய்வு கூடம் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.