பதிவு செய்த நாள்
11
மே
2024
01:05
சென்னை; வடபழநி ஆண்டவர் கோயிலில் வைகாசி விசாகம் பிரம்மோற்சவம் மற்றும் விடையாற்றி விழா நாளை (12ம் தேதி) விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது.
தொண்டை வளநாட்டில் தருமமிகு சென்னை வடபழநியில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அளிக்கும் கலியுக வரதனாகவும், கண்கண்ட தெய்வமாகவும் எழுந்தருளி, கருணை மழை பொழியும் வள்ளலாக காட்சி தருபவர் அருள்மிகு வடபழநி ஆண்டவர். பல சிறப்பு மிக்க இத்தலத்தில் நாளை (12-05-2024) ஞாயிறு முதல் வைகாசி மாதம் 10ம் நாள் (23-05-2024) வியாழன் வரை வைகாசி விசாக உற்சவமும், வைகாசி மாதம் 1ம் நாள் (24-05-2024) வெள்ளி முதல் வைகாசி மாதம் 20ம் நாள் (02-06-2024) ஞாயிறு வரை விடையாற்றி உற்சவமும் பிரம்மோற்சவமாக நடைபெற உள்ளது.
வரும் 13ம் தேதி திங்கள் அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்று, மாலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி காலை. மாலை இருவேளைகள் பூஜைகள் நடைபெற்று வைகாசி 09-ம் நாள் (22-05-2024) புதன்கிழமை காலை தீர்த்தவாரி முடிந்து, உச்சி காலத்துடன் பூஜைகள் பூர்த்தியாகிறது. அன்று மாலை 7 மணி அளவில் திருக்கல்யாணம், திருவீதி உலா. துவஜ அவரோகணம் நடைபெறுகிறது. இவ்விழாக்காலங்களில் தினமும் சிறப்பு நாதஸ்வர இசையும், தேவாரத் திருப்புகழ் இன்னிசையும், வேதபாராயணமும், விடையாற்றி உற்சவத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை தக்கார் ல.ஆதிமூலம், துணை ஆணையர் ஹரிஹரன், திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருவிழா நிகழ்ச்சிகள் விபரம்;
சித்திரை 29 12-05-2024 ஞாயிறு முதல் நாள் – ஆரம்பம் மாலை 5 மணிக்குமேல் இரவு 7.00 மணிக்குள் – அருள்மிகு விநாயகர் மூஷிக வாகனத்தில் புறப்பாடு
சித்திரை 30 13-05-2024 திங்கள் இரண்டாம் நாள் – காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் – ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் துவஜா ரோஹணம்
மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வயானை சமேத சுப்பரமணியர் வீதி உலா
வைகாசி 01 14-05-2024 செவ்வாய் – காலை 7.00 மணி இரவு 7.00 மணி – சூரிய பிரபை, சந்திரபிரபையில் வள்ளி தெய்வயானை சமேத சுப்பரமணியர் வீதி உலா
வைகாசி 02 15-05-2024 புதன் – ஆட்டுக்கிடா வாகனத்தில் சமேத சுப்பரமணியர் வீதி உலா
வைகாசி 03 16-05-2024 வியாழன் – நாக வாகனத்தில் வள்ளி தெய்வயானை சமேத சுப்பரமணியர் வீதி உலா
வைகாசி 04 17-05-2024 வெள்ளி – பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
வைகாசி 10-ம் நாள் வைகாசி 09, 22-05-2024 புதன்கிழமை மாலை 7.00 மணியளவில் திருக்கல்யாண உற்சவம்
வைகாசி 07-ம் நாள் வைகாசி 06, 19-05-2024 ஞாயிற்றுகிழமை காலை 7.00 முதல் 8.00 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.