பதிவு செய்த நாள்
11
மே
2024
01:05
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒற்றை பளிங்கு கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட 18.5 அடி உயர காளி சிலை, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்துக்கு லாரியில் எடுத்து வரப்பட்டது.
பளிங்கு கற்களுக்கு பெயர் பெற்ற, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சாமி சிலைகள் செய்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இங்குள்ள முகேஷ் பரத்வாஜ் என்ற சிற்பி, 18.5 அடி உயர காளி சிலையை பிரமாண்டமாக வடிவமைத்துள்ளார். ஒரே பளிங்கு கல்லில் உருவாக்கப்பட்ட இந்த சிலை, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பவுர்ணமிகாவு கோவிலுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. 50 டன் எடையில் உருவாக்கப்பட்ட இந்த காளி சிலையுடன், 12 அடி உயர துர்கா மற்றும் ராஜ மாதங்கி தேவி சிலைகளும் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுடன் அவற்றிற்கான வாகனங்களான அன்னப்பறவை, சிங்கம், புலி, மயில் ஆகியவையும் தயார் செய்யப்பட்டுள்ளன. சிலைகள் முழுமை பெற்றதை அடுத்து, அதற்கான பூஜைகள் செய்யப்பட்டு திருவனந்தபுரத்துக்கு லாரியில் எடுத்து வரப்பட்டது. திருவனந்தபுரம் பவுர்ணமிகாவு கோவிலில் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.