திருக்கோஷ்டியூரில் ராமானுஜரின் 1007 வது அவதார உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2024 10:05
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் மகான் ராமானுஜரின் 1007 வது அவதரித்த நாள் கொண்டாடப்பட்டது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் மூலவர் அஷ்டாங்க விமானத்தில் ஏறி திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கற்ற மந்திரத்தை ராமானுஜர் மக்களுக்கு உபதேசித்த சிறப்பை பெற்றது. இதனால் இங்கு ராமானுஜருக்கு தனி சன்னதி உள்ளது. நேற்று உற்ஸவ ராமானுஜர் பெருமாள் சன்னதி எழுந்தருளி மங்களாசாஸனம் நடந்தது. தொடர்ந்து தயார், ஆண்டாள்,திருக்கோஷ்டியூர் நம்பி சன்னதிகளிலும் எழுந்தருளி மங்களாசாஸனம் நடந்தது. பின்னர் ராமனுஜர் தென்னமரத்து வீதி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து ராமானுஜர் சன்னதி எழுந்தருளி பிரபந்தம், சாத்துமுறை கோஷ்டி, தீர்த்த விநியோகம் நடந்தது. ராமானுஜர் நூற்று அந்தாதி கோஷ்டி நடந்தது. பின்னர் மங்களாசாஸனத்துடன் நிறைவு பெற்றது. ஏற்பாட்டினை சமஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் செயதார்.