புதுச்சேரி: நாணமேடு கிராமத்தில் உள்ள சேஷாசிரமத்தில், கிருஷ்ண பக்ஷ அஷ்டமியை முன்னிட்டு, இன்று சொர்ண பைரவர் ஹோமம் நடக்கிறது. தவளக்குப்பம் அடுத்துள்ள இடையார்பாளையம் நாணமேடு கிராமத்தில் சேஷாசிரமம் அமைந்துள்ளது. இங்கு, கிருஷ்ண பக்ஷ அஷ்டமியை முன்னிட்டு, இன்று (6ம் தேதி) மாலை 3 மணிக்கு சொர்ண பைரவர் ஹோமம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, முத்து குருக்கள் செய்துள்ளார்.