ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன், ஒரு கோடி ரூபாயில், கருங்கல் மண்டபம் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, தெற்கு நந்தவன கன்னி மூலையில், ஒரு கோடியில் சுவாமி, அம்மன் திருக்கல்யாண மண்டபம், தமிழ்நாடு எரிசக்தி முகமை மூலம், மத்திய அரசு நிதியுடன், 50 லட்சத்தில் சோலார் விளக்குகள் அமைக்கும் பணி, துவக்கப்பட உள்ளது.