பதிவு செய்த நாள்
15
மே
2024
02:05
ஹாசன்; தமிழக கவர்னர் ரவி, தன் மனைவி லட்சுமியுடன், ஸ்ரவண பெல கோளாவின் விந்திரகிரி மலைக்கு வந்து, பாகுபலியை மற்றும் கூஷ்மான்டனி தேவியை தரிசனம் செய்தார். தமிழக கவர்னர் ரவி, கர்நாடகாவின் ஹாசனுக்கு நேற்று தன் மனைவி லட்சு மியுடன் வந்தார். பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாக விளங்கும் ஸ்ரவண பெல கோளாவின் விந்தியகிரி மலைக்கு சென்று, பாகு பலி சுவாமி மற்றும் கூஷ் மான்டினி தேவியை, தரிசனம் செய்தனர். மடாதிபதி அபிநவ சாரு கீர்த்தி பட்டாரகா சுவாமியி டம் ஆசிபெற்றனர். மடம் சார்பில் ரவி தம்பதிக்கு, நுால்கள், மூன்று விதமான பழங்கள், கலசம் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். கவர்னர் ரவி கூறியதாவது: உலக பிரசித்தி பெற்ற, ஒரே கல்லில் செதுக்கப் பட்ட பாகுபலியின் சிலை, புண்ணிய தலத்தின் வர லாற்று பின்னணி, கல் வெட்டுகள், கலை, இலக் கியத்தின் சிறப்புகளை கண்டு மகிழ்ந்தேன் பள்ளி நாட்களில், சந்திரகுப்த மவுரியா, பத்ர பாஹு முனிவர் குறித்து படித்துள்ளேன். நீண்ட நாட்களாகவே, இங்கு வர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இன்று (நேற்று) வந்தேன். 2030ல் நடக்கும் மஹா மஸ்தாபிஷேகத்துக்கு வருவேன். இவ்வாறு அவர்கூறினார்.