லோகநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம்; இன்று பூப்பல்லக்கு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2024 10:05
காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள ஆ. முத்துப்பட்டினம் லோகநாயகி அம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. காரைக்குடி அருகேயுள்ள ஆத்தங்குடி முத்துப்பட்டினம் லோகநாயகி அம்மன் கோயில் திருவிழா கடந்த மே 20 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் இரவு அம்மன் காமதேனு, யானை, சிம்மம் அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. காலையில் அம்மன் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 11 மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.