மானாமதுரை; மானாமதுரை அருகே வேலூர் வேலாங்குளத்திலுள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால்,பன்னீர்,திரவியம், சந்தனம்,குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. கோமம் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து யாகம் நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவில் வேலூர் வேளாங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.