கிணற்றுக்குள் இருந்து வெளியே வந்த அம்மன்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2024 12:05
கடலுார்; கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுக்கா, வள்ளலார் அவதரித்த மருதூரில் வரலாற்று சிறப்பு வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை நாயுடு சமுகத்தை சேர்ந்தவர்கள் காலம் காலமாக நிர்வகித்து வருகின்றனர். தற்போது எட்டாது தலைமுறையாக நிர்வாக பொறுப்பில் உள்ளனர். அந்த வகையில் தற்போது கிணற்றில் எட்டு அம்மன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.ஒரு தலைமை முறை நிர்வாக பொறுப்பேற்றவுடன் ஒரு சிலை செய்து வைப்பது வழக்கம்.
இக்கோவிலில் உதிரவேங்கை மரத்தில் செய்யப்பட்ட அம்மன் ஆண்டுதோறும் கிணற்றில் தண்ணீரில் மூழ்கி வைக்கின்றனர். வைகாசி மாதம் கடைசி அமாவாசைக்குப் பின் புதன் கிழமை மாலையில் சுமார் 50 அடி ஆழம் நிறைந்த கிணற்றில் இருந்து அம்பாளை வெளியில் எடுத்து, வழிபடுவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று, கிணற்றுக்குள் இருக்கும் செல்லியம்மனை வெளியே எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.