கந்தவடி உற்ஸவம்; கருட வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2024 12:05
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் நேற்று மாலை கந்தவடி உற்ஸவம் நடந்தது.
எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்திமான பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் கோயில் 22–வது வைகாசி பிரம்மோற்ஸவம், 117 வது வசந்த விழா நடந்தது. தொடர்ந்து 20 நாட்கள் நடந்த விழாவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். மேலும் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் காட்சி அளித்து மே 27ல் மீண்டும் கோயிலுக்கு திரும்பினார். இதனை ஒட்டி மே 29 காலை உற்ஸவ சாந்தி அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சைத்யோபசாரம் நடந்தது. நேற்று கந்தவடி உற்ஸவத்தில் மாலை 6:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெரிய திருவடியான கருட வாகனத்தில் வைகுண்ட நாதனாக அருள் பாலித்தார். பின்னர் தீபாராதனைகள் நடந்து ரத வீதிகளில் பெருமாள் வீதி உலா வந்து கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகத்தார்கள், கவுன்சிலர்கள் செய்திருந்தனர்.