திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அடுத்த எரளூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழா கடந்த 12ம் தேதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து 28ம் தேதி கரக திருவிழாவும், நேற்று முன்தினம் காலை அரவான், வீரபத்திரன் சுவாமி வீதியுலாவும் நடந்தது. பின், 11:30 மணிக்கு அரவான் சிரசு ஏற்று நிகழ்ச்சியும், பிற்பகல் 3:00 மணிக்கு பஞ்ச பாண்டவர்கள் கதையை மையமாகக் கொண்டு மாடு வளைத்தல, கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது. விழாவில் எரளூர் சுற்றியுள்ள செம்மார், வலையாம்பட்டு, பேரங்கியூர், ஏனாதிமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சப் இன்ஸ்பெக்டர் லட்சுமண நாராயணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.