கீழடி அருகே அகோரி மடம் திறப்பு; சிவலிங்கத்திற்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2024 07:06
கீழடி; கீழடி அருகே இலந்தைகுளத்தில் தனியார் நிலத்தில் அகோரி மட திறப்பு விழா நேற்று நடந்தது. வடமாநிலங்களில் அதிகளவு காணப்படும் அகோரிகள் எனப்படும் இந்து சாமியார்கள் தமிழகததில் கும்பமேளா உள்ளிட்ட தினங்களில் மட்டும் வருகை தருவது வழக்கம் இந்த நிலையில் மதுரையை சேர்ந்த அகோரி பாக்யநாதன் என்பவர் இலந்தைகுளம் காட்டுப்பகுதியில் ஐந்து சென்ட் பரப்பளவில் கட்டடம் கட்டி அகோரி மடம் என்ற பெயரில் நேற்று சிறுமி ஒருவரை கொண்டு திறந்து வைத்தார். பின் சிவலிங்கத்திற்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.