பதிவு செய்த நாள்
06
ஜூன்
2024
11:06
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சங்கரன்கோவில் சங்கர்நகர் 2ம் தெருவில் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்பட்ட திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோயிலில் பூக்குழி திருவிழா நேற்று அதிகாலை கொலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று (6ம் தேதி) இரவு 8.30 மணிக்கு சக்தி கும்பம் நிறுத்துதல் நிகழ்ச்சியும், நாளை (7ம் தேதி) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. வரும் 9ம்தேதி ஐந்தாம் கரகம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 12ம்தேதி அர்ச்சுனன் தவக்கோலத்துடன் பாசுபதாஸ்திரம் பெறுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி திரவுபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி காலை 9 மணிக்கு சக்தி நிறுத்துதல், அக்னி வளர்த்தல் நிகழ்ச்சியும், மாலை 6:30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 15ம்தேதி மஞ்சள் நீராட்டு, 16ம் தேதி ஊஞ்சல் மற்றும் அன்னதானம் நடக்கிறது. 18ம் தேதி பால்குடம் மற்றும் அம்மன் படைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கொடியேற்று விழா நிகழ்ச்சியில் செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் குருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.