Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள் ... பழநி முருகன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்: முருகனுக்கு காப்பு கட்டப்பட்டது பழநி முருகன் கோயிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு மேல்மலையனூரில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு மேல்மலையனூரில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 அக்
2026
05:10

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பக்கர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நேற்று  இரவு புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11:15 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அர்ச்சனையுடன் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது.


ஊஞ்சல் தாலாட்டின் போது கோவில் பூசாரிகளும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இரவு 12:15 மணிக்கு மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருள் அரசு, எஸ்.பி. மதிவாணன், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷ்னர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, நடைமுறை அறங்காவலர் பச்சையப்பன் கலந்து கொண்டனர். மகாளய அமாவாசை மற்றும் விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தைவிட கூடுதலாக பக்தர்கள் குவிந்து இருந்தனர். இதனால் ஊஞ்சல் உற்சவம் நடந்த இடத்திலும், மேல்மலையனூரிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. சென்னை, கடலூர், வேலூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar