பழநி முருகன் கோயில் வின்ச் பராமரிப்பு பணிக்காக நாளை நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2024 05:06
பழநி; பழநி முருகன் கோயில் சென்றுவர பயன்படும் வின்ச் சேவை நாளை மதியம் 1:30 மணி முதல் 4.30 மணி வரை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது.
பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பாதை, யானைப்பாதை உள்ளன. வின்ச் சேவையில் ஏழு நிமிடத்தில் மலைக்கோயில் செல்லலாம். மூன்று வின்ச் இயங்கி வருகிறது. வின்ச்சில் ஒருமுறை செல்ல, முதல் மற்றும் இரண்டாவது வின்ச்சுகளில் தலா 36 பேர் பயணிக்கலாம் மூன்றாவது வின்சில் 72 பேர் பயணிக்கலாம். இந்நிலையில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (ஜூன் 19) வின்ச் சேவை மதியம் 1:30 மணி முதல் 4:30 மணி வரை நிறுத்தப்பட உள்ளது. என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.