பதிவு செய்த நாள்
10
நவ
2012
10:11
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயில் கந்தசஷ்டி விழா, நவ., 13 ல் துவங்குகிறது. 18 ல் சூரசம்ஹாரம் நடக்கிறது.வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி, தினமும் சஷ்டிப்பாராயணம், ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி, ஆறாம் நாள் சூரசம்ஹாரம் , 7 ம் நாள் சுவாமி, அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுற்று கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபடுவர். விழா நவ., 19 வரை நடக்கிறது. முதல்நாள், கொளிஞ்சிவாடி தமிழ்ப்பித்த ஆதினம், துவக்கி வைத்து அருளாசிகள் வழங்குகிறார். இதை தொடர்ந்து, நவ.,18 ல் முத்தாலம்மன் திடல் மைதானத்தில் சூரசம்ஹாரம், 19ல் கோயில் சஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கந்தர்சஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன், நிர்வாகிகள் செய்துள்ளனர்.