மேட்டூர்: பெரியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று முன்தினம் சேலம் வந்தார். சேலம் அருகிலுள்ள பழமையான தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு நேற்று காலை கவர்னர் ரோசய்யா வருகை தந்தார்.சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் கவர்னர் ரோசய்யாவை வரவேற்றார். கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோவில் பிரகாரத்தில் நுழைந்த கவர்னர் அங்கிருந்த கல் சிற்பங்களை பார்வையிட்டார்.பிரகாரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மன்மதன், ரதி சிலையை பார்வையிட்ட கவர்னருக்கு, மன்மதன் சிற்பம் அருகில் நின்று பார்த்தால் ரதி சிற்பம் தெரியாது, ரதி அருகில் இருந்து பார்த்தால் மன்மதன் சிற்பம் தெரியும். ரதிக்கு மட்டுமே மன்மதன் தெரியும் வகையில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின் கைலாசநாதரை வழிபாடு செய்த கவர்னர் சேலம் புறப்பட்டு சென்றார்.