அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2024 01:06
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம் நடந்தது. பிரம்மோற்ஸவ விழா ஜூன் 10 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 13 நாட்கள் நடைபெறும் விழாவில், 10ம் நாள் விழாவாக மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை 4:45 மணிக்கு கோயிலில் இருந்து மீனாட்சி சொக்கநாதர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தேரில் வைக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தேரோட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் சேர்மன் சுப்பாராஜ், நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி வடம் பிடித்து துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.