அழகர்கோவிலில் ஆடி பெருந்திருவிழா; ஜூலை 13 துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2024 01:06
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடிப்பெருந்திருவிழா ஜூலை 13 காலை 7:45 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஜூலை 17ல் சிவகங்கை சமஸ்தான மறவர் மண்டபத்தில் காலை 6:45 – 7:30 மணிக்குள் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். ஜூலை 20 இரவு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஜூலை 21ல் காலை 6:45 மணிக்கு மேல் 7:20 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. ஆடி பவுர்ணமி அன்று மாலை பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு படிப்பூஜை, தீபாராதனை, சந்தனம் சாத்துதல் நடைபெறுகிறது. ஜூலை 23ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஆக.,4ல் ஆடி அமாவாசை மாலை 6:30 – இரவு 7:15 மணிக்குள் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது.