எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2024 04:06
பரமக்குடி; பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று ஜேஸ்டாபிஷேக விழா நடந்தது. அப்போது பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் இரவு 7:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளம் முழங்க, பிரபந்தங்கள், பஜனை பாடல்களை பாகவதர்கள் பாடியபடி பெருமாள் வீதி உலா வந்தார்.
*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் அலங்காரமாகினார். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு தேங்காய் உடைத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.