சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2024 04:06
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
வெங்கடாஜலபதி கோயில் ஆணித்திருவிழா 12 நாட்கள் நடைபெறும். கடந்த ஜூன் 14 கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெருமாள்சுவாமி,சிறியகருடன் பெரியகருடன் சப்பரம், வெற்றி வேர், யானை உள்ளிட்ட வாகனங்களில் நகர்வலம் வந்தார். திருவிழாவின் முக்கியநிகழ்ச்சியானதேரோட்டம் நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கியது.முன்னதாக காலை 7:00 மணிக்கு சுவாமி பூதேவி, ஸ்ரீதேவி சமேதரராய் தேரில் எழுந்தருளினார். சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர் மதியம் 2 :00 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தை தொடர்ந்து நுாற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.