பதிவு செய்த நாள்
29
ஜூன்
2024
08:06
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கமலா நேரு தெருவில் உள்ள காமாட்சி அம்மன், சித்தி விநாயகர் கோவிலில் அம்மனுக்கு ஆனி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நுாற்றாண்டு பழமைவாய்ந்த இக்கோவிலில் சித்தி விநாயகர், காமாட்சி அம்மன், வீரபக்த ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி, கயல்விழி அம்பிகை உடனுறை ஏகாம்பரேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணியன், துர்க்கையம்மன், நவக்கிரகங்கள், சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் வளர்பிறை, தேய்பிறை பிரதோஷ வழிபாடுகள், விளக்கு பூஜைகள், ஆடி வெள்ளி வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்து, லலிதா சகஸ்ரநாம மந்திரங்கள் பாராயணம் செய்து மகாதீபாராதனை காண்பித்து, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தங்க கவசம் அணிவித்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஆராதனைகள் செய்தனர். பெண்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டனர். ராஜகோபால் பட்டாட்சாரியார் வைபவங்களை செய்து வைத்தார். வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வேலு செய்திருந்தார்.