தொண்டி:தொண்டி அருகே புதுக்குடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நவ.11 காலை கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜை நடந்தது. வேத விற்பன்னர்ள் மந்திரங்கள் முழங்க, காலை 9.30 கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.