பதிவு செய்த நாள்
12
நவ
2012
11:11
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அடுத்த பு.கொணலவாடி கிராமத்தில் மன்னாதீஸ்வரர், பச்சைவாழியம்மன், செம்மலையார் கோவில் கும்பாபிஷேகம் நவ.11 நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 10ம் தேதி காலை கணபதி பூஜை, மாலை வாஸ்து
சாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்கார யாகசாலை பிரவேசம், கலச பூஜை யாக வேள்வி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.நவ.11 காலை 5 மணிக்கு கோ பூஜை, கலச பூஜைகள், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. 8.45 மணிக்கு மன்னாதீஸ்வரர், பச்சைவாழியம்மன், செம்மலையார் கோவில் மற்றும் பரிவார சாமி சன்னதிகளுக்கு புனித நீர்
ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.