பரமக்குடி; பரமக்குடியில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று மாலை கார்த்திகை தினத்தில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் அருள் பாலிக்கும் செந்தில் ஆண்டவருக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளி கவசம் சாற்றி வெள்ளி வேல் ஏந்தி நின்ற சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
*பரமக்குடி தரைப்பாலம் வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் பரமக்குடியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் நடந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.