இலங்கையிலுள்ள ஒரு மலை நகரம் நுவரெலியா. ‘நுாராலர்’ என்ற சிங்களச் சொல்லில் இருந்து வந்தது இது. ‘அணையா நெருப்பு’ என்பது இதன் பொருள். அசோக வனத்தில் சீதை சிறையிருந்த போது, அனுமன் இலங்கைக்கு வைத்த நெருப்பு இன்றும் அணையாமல் இருப்பதாக சிங்களர்கள் நம்புகின்றனர். இதனால் இந்த மலைக்கு ‘நுவரெலியா’ என பெயர் சூட்டினர். இங்குள்ள மண்ணும் நெருப்பில் எரிந்தது போல கருப்பாக உள்ளது. இங்குள்ள சீதாதேவி கோயில் புகழ் மிக்கது.