முன்பொரு காலத்தில் வெள்ளப்பெருக்கால் சிரமப்பட்ட மக்கள், சிவபெருமானை வேண்டினர். அவர் திரிசூலத்தால் துளையிட வெள்ளம் பூமிக்குள் சென்றது. அந்த இடமே ‘திருச்சுழி’ எனப் பெயர் பெற்றது. பராக்கிரம பாண்டியன் காலத்தில் இங்கு கோயில் கட்டப்பட்டது. ஆண்டுக்கு இரண்டு முறை மூலவர் மீது சூரிய ஒளி படும் விதத்திலும், அகழி அமைப்பிலும் கருவறை உள்ளது. திருமேனிநாதர் என்பது சுவாமியின் திருநாமம். பூமாதேவி வழிபட்டதால் பூமிநாதசுவாமி என்றும் இவருக்குப் பெயருண்டு. சகாய வல்லி, துணைமாலை நாயகி என்பது அம்மனின் திருநாமங்கள். அம்மன் சன்னதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் கல்லால் ஆன ஸ்ரீசக்கரம் உள்ளது. மனை வாங்கவும், வீடு கட்டவும், நிலப்பிரச்னை தீரவும் இங்கு வழிபடலாம். மதுரையில் இருந்து 59 கி.மீ., துாரத்தில் கோயில் உள்ளது.