தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. ஜாதகம் இல்லை என வருந்துபவர்கள் இங்கு அம்மன் முன்னிலையில் பூக்கட்டி திருமண பொருத்தம் பார்க்கிறார்கள். அப்போது நினைத்த பூ கிடைக்கவில்லையெனில் தொடர்ந்து பத்து நாட்கள் அம்மனை வழிபட்டு 11 வது நாளன்று மீண்டும் பூக்கட்டி பார்ப்பர். நினைத்த பூ கிடைத்தால் திருமணத்தை நடத்துவர். இல்லாவிட்டால் இதை இன்னும் ஒரு முறை முயற்சிப்பர்.