Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி ... ஆடி பூஜைகளுக்கு சபரிமலை நடை 15ல் திறப்பு; மாத பிறப்பு வித்தியாசத்தால் பக்தர்கள் குழப்பம் ஆடி பூஜைகளுக்கு சபரிமலை நடை 15ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படுகர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் ஹரிக்கட்டுதல் தானிய நாள் விழா பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
படுகர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் ஹரிக்கட்டுதல் தானிய நாள் விழா பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2024
03:07

கோத்தகிரி; நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக மக்களின் கிராமங்களில், ஹரிக்கட்டுதல் என்ற தானிய திருவிழா கொண்டாடப்பட்டது.


நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகு சமுதாய மக்களின் குலதெய்வமான ஹிரியோடைய்யா திருவிழா ஆண்டுதோறும், ஜூலை மாதம் நடக்கிறது. இவ்விழாவை ஒட்டி, நேற்று கிராம கோவிலில் இருந்து சங்கொலி எழுப்பி, பனகுடி என்ற வனக்கோயிலுக்கு பக்தர்கள் சென்றனர். ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைத்திறக்கப்படும் இக்கோவிலில், முதல் கன்றுக்குட்டி ஈன்ற பசும்பால், கொம்பு தேன் மற்றும் தும்பையை வைத்து, பிரம்புகளை உரசி, அதிலிருந்து வெளியேறிய தீப்பொறி கொண்டு, நெய்தீபம் ஏற்றியப்பின் ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் கலாச்சாரம் உடையுடன், காணிக்கை செலுத்தி ஐயனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று காலை, கிராம கோவில் அருகில் அமைந்துள்ள ஹக்கபக்க கோவிலில், வனப்பகுதியில் இருந்து சேகரித்து வந்த மூங்கில் தழைகளை கயிறாக நெய்து கட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள கல் தூணில், எள் மற்றும் பருத்தியை கொண்டு நெய்தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் பயபக்தியுடன், காணிக்கை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜை நடத்துவதன் மூலம், உணவு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம். இவ்விழா, ஹக்கபக்க அமைந்துள்ள கடநாடு, ஒன்னதலை, கக்குச்சி, டி. மணியட்டி மற்றும் பனஹட்டி உள்ளிட்ட கிராமங்களில் சிறப்பாக நடந்தது.


மண்டை தண்டு: கோத்தகிரி பொரங்காடு சீமைக்கு உட்பட்ட தாந்தநாடு தொட்டூரில் மண்டை தண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், வெளியூர்களிலிருந்து, தாந்தநாடு தொட்டூருக்கு திருமணமாகி, முதல் ஆண்குழந்தை பெற்றெடுத்த பெண்கள், கலாச்சார உடையுடன், பழங்கால ஆபரணங்கள் அணிந்து, குழந்தைகளுடன், கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காணிக்கை செலுத்தி, சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar