ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் படிக்கட்டுகள் சேதம் : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2024 05:07
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் படிக்கட்டுகள் சேதமடைந்து உள்ளதால், பக்தர்கள் இடறி விழுந்து அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள், முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக மத்திய சுற்றுலா நிதியின் கீழ் 2020ல் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமெண்ட் சிலாப்பில் படிக்கட்டுகள் அமைத்தனர். இந்த படிக்கட்டுகள் ராட்சத அலையில் சேதமடைந்து விடும் என கட்டுமானம் துவக்கத்திலே ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் படிக்கட்டுகள் அமைத்த நிலையில், தற்போது ராட்சத அலையால் அனைத்து படிக்கட்டும் சேதமடைந்து கிடக்கிறது. இதன் வழியாக நீராடச் செல்லும் பக்தர்கள் இடறி விழுந்து காயம் அடைகின்றனர். இதனை அகற்றி இயற்கை சார்ந்த கடற்கரை உருவாக்கிட பக்தர்கள் வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் தினமும் அவதிப்படும் பக்தர்கள் நலன் கருதி அக்னி கடற்கரை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.