பதிவு செய்த நாள்
11
ஜூலை
2024
10:07
சிதம்பரம்; உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று படம் பிடித்து வா வா நடராஜா என்ற கோஷத்துடன் தேர் இழுத்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவ விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். இன்று காலை ஆறு முப்பது மணிக்கு மூலவரான நடராஜரும் சிவகாமசுந்தரம் சித் சபையில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினர். அதன்பின்னர் கீழவீதி தேர் நிலையிலிருந்து 7:45 மணிக்கு தேர் புறப்பட்டது. முதலில் விநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், அதனைத் தொடர்ந்து நடராஜர் அதன்பின்னர் சிவகாமசுந்தரி அவரை தொடர்ந்து கடைசியில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித் தனி தேர்களில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வீதி உலா புறப்பட்டனர். கீழவெளியில் புறப்பட்ட தேர் தெற்குவீதி, மேலவீதி வழியாக சென்று மதியம் 12.30 மணி அளவில் சிதம்பரம் கஞ்சி தொட்டியில் நின்றது. அதனைத் தொடர்ந்து மாலை நாலு மணிக்கு பருவத ராஜகுல மீனவர்கள் சார்பில் மூர்த்தி கதை மோகன் தலைமையில் நடராஜருக்கு சீர்வரிசை செய்யப்பட்டது. அதன்பின் அங்கிருந்து தேர் புறப்பட்டு மீண்டும் வடக்கு வீதி வழியாக சென்று கீழவெளியில் தேர் நிலை வந்தடைந்தது. தேரோட்டத்தை ஒட்டி பக்தர்கள், வீதிகளை தண்ணீர் இட்டு கழுவி தேருக்கு முன்பாக கோலமிட்டு சென்றனர். மேலும் சிவ பக்தர்கள் நடன தாண்டவம் ஆடியும், சிறார்கள் கோலாட்டம் குச்சாட்டம் ஆடி மகிழ்வித்து சென்றனர். நாளை (12ம் தேதி) ஆனி திருமஞ்சன தரிசன விழா நடக்கிறது. ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
லைவ் லிங்க்; இன்றைய சிறப்பாக தமிழகத்தில் புகழ்பெற்ற ஆகாசஸ்தலமான சிதம்பரம் நடராஜர்கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்து வருகிறது. இதன் லைவ் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.