அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம்; வெள்ளிக்கவசத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2024 05:07
திருவண்ணாமலை ; அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவ நான்கம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கவசம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மாட வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலுள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு, 4 முறை கொடியேற்றம் நடக்கிறது. சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக, ஆனி பிரம்மோற்சவம் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தாண்டு ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் நான்கம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு, உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் வெள்ளிக்கவசம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மாட வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.