திருவாரூர் சூட்சமபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2024 12:07
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம் சிறுகுடி கிராமத்தில் உள்ள மங்கலாம்பிகை சமித சூட்சமபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்குள்ள இறைவனை வழிபட்டால் வேண்டிய பதவிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து 8ம் தேதி யாக பூஜைகள் நடந்தது. பூஜை முடிவில் இன்று சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.