கோயில்குளம் தூர்வாரிய போது 350 கிலோ எடை கொண்ட உலோக சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2024 10:07
மயிலாடுதுறை; கோனேரிராஜபுரம் கோயில் குளம் தூர் வாரிய போது 3 அடி உயரம், 350 கிலோ எடை கொண்ட உலோக சிலை கண்டெடுப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோனேரிராஜபுரம் கிராமத்தில் தேவார பாடல்பெற்ற பழைமை வாய்ந்த உமாமகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கட்டிட அமைப்பைக் கொண்டு இக்கோவிலில் உள்ள தனி சன்னதியில் 8.5 அடி உயரம் கொண்ட உலகில் மிகப் பெரிய பஞ்சலோக நடராஜர் சிலை அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் தீர்த்த குளம் கோயில் நிர்வாகம் சார்பில் தூர்வாரப்பட்டது. அப்போது குளத்தில் 3 அடி உயரத்தில் 350 கிலோ எடையில் தலை, கை, கால், இல்லாமல் உடல் மட்டும் தகவல் அறிந்த குத்தாலம் தாசில்தார் சத்தியபாமா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து சிலையை பார்வையிட்டனர் பின்னர் அந்த சிலை குத்தாலம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொல்லியல்துறை ஆய்விற்கு பின்னரே இந்த சிலை ஐம்பொன் சிலையா என்று தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.