பதிவு செய்த நாள்
18
ஜூலை
2024
10:07
சாணார்பட்டி; திண்டுக்கல் அருகே கவசனம்பட்டி தோட்ட மலையாண்டிசாமி கோயிலில் மலையாண்டி சாமி சிலை பிரதிஷ்டை செய்யும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி தோட்ட மலையாண்டி சாமி கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், அழகர் கோயில், வைகை, காவிரி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர்பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி. திக்பந்தனம் மிருச்சங்கிரணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், பஞ்சமாவர்ணபூஜை, தோரணபூஜை வேதபாராயணம், மூலமந்திரம் ஜெபஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க தோட்ட மலையாண்டி சாமி மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு கண் திறக்கப்பட்டது. அப்போது கருடர்கள் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.