திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி பிரதோஷ வழிபாடு; சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 06:07
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பால், சந்தனம் என பல்வேறு அபிஷேகம் நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சுவாமி சன்னதியில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டப வளாகத்தில் உள்ள பெரிய நந்தி மற்றும் கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்களில் உள்ள நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.