Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கேணி மாரியம்மன் கோவிலில் 501 ... மேல்மாம்பட்டு ஐயனாரப்பன் கோவில் கும்பாபிேஷகம் மேல்மாம்பட்டு ஐயனாரப்பன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
120 ஆண்டுகளில் முதன் முறையாக பனிமயமாதா சர்ச்சில் மரத்தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
120 ஆண்டுகளில் முதன் முறையாக பனிமயமாதா சர்ச்சில் மரத்தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2024
11:07

உத்தமபாளையம்; தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் 123 ஆண்டுகளில் முதன் முறையாக மரத்திலான தேர் புதிதாக உருவாக்கப்பட்டு, பனிமய மாதா சர்ச் தேரோட்டம் அடுத்த மாதம் நடைபெறுவதை முன்னிட்டு தேர் வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது. 


தென் மாவட்டங்களில் உள்ள சர்ச்களில் ராயப்பன் பட்டி பனிமய மாதா சர்ச் மிகவும் பழமையானது. பிரசித்தி பெற்றது. 1902 ல் கட்டப்பட்டது. இந்த சர்ச்சில் உள்ள வெண்கல மணி ஆயிரம் கிலோ எடை கொண்டது. பிரான்ஸ் நாட்டில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பனிமய மாதா சர்ச்களில் ஆகஸ்ட்டில் அன்னை தேர்ப்பவனி நடைபெறும். தமிழகத்தில் தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் தேர்ப்பவனி மரத்திலான தேரில் நடைபெறும். மற்ற ஊர்களில் சப்பரத்தில் டிராக்டரில் நடைபெறும். ராயப்பன் பட்டியில் இதுவரை மாதா ஊர்வலம் சப்பரத்தில் வைத்து டிராக்டர் மூலம் நடைபெற்று வந்தது. தற்போது ரூ.40 லட்சம் செலவில் 29 அடி உயரத்தில் 7 டன் எடையுள்ள மரத்திலான தேர் புதிதாக செய்யப்பட்டுள்ளது. நேற்று தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. பங்குத் தந்தை ஞானப்பிரகாசம் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். கிராம கமிட்டி தலைவர் பிரபாகர், கிராம கமிட்டி நிர்வாகிகள் பொது மக்களும் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சர்ச்சை அடைந்தது. இந்த தேர் வெள்ளோட்டத்தில் திரளாக பொது மக்கள் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar