செங்கழுநீர் அம்மன் கோவிலில் 96ம் ஆண்டு செடல் உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2024 10:07
புதுச்சேரி; வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் 96ம் ஆண்டு செடல் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. புதுச்சேரி வாழைக்குளம், அப்பாவு நகர் பகுதியில் செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. 96ம் ஆண்டு செடல் மகோற்சவ விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், இரவு அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான 26ம் தேதி மதியம் 1:00 அளவில் செடல் உற்சவம் நடக்கிறது. 27ம் தேதி மாலை 6:00 மணியளவில், அம்மனுக்கு சந்தன காப்பு நிகழ்ச்சி, அன்று இரவு 1:00 அளவில் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.