Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டையம்மன் கோவில் ஆடித்திருவிழா ... செங்கழுநீர் அம்மன் கோவிலில் 96ம் ஆண்டு செடல் உற்சவம் துவக்கம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் 96ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி சங்கரமடத்தில் ஜெயேந்திரர் 90வது ஜெயந்தி விழா விமரிசை
எழுத்தின் அளவு:
காஞ்சி சங்கரமடத்தில் ஜெயேந்திரர் 90வது ஜெயந்தி விழா விமரிசை

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2024
06:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமகோடி பீடம், சங்கரமடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் 90வது ஜெயந்தி மஹோத்ஸவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் இன்று விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் சங்கரமடத்தின், 70வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆக்ஞைப்படி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், இன்று காலை 8:00 மணிக்கு சதுர்வேத பாராயணம், ஏகாதச ருத்ரம், ஹோமம், ஜபம் வேத பாக்ஷ்ய ஸதஸ் மற்றும் விசேஷ அபிேஷக ஆராதனையை தொடர்ந்து, மலர் அலங்காரம் நடந்தது. மாலை 4:35 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிஷேகமும், நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடந்தது, நலிந்த கிராமப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இரவு 7:30 மணிக்கு ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் தங்க ரத ஊர்வலம் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சி சங்கரமடம் ஸ்ரீகார்யம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி செய்திருந்தார். முன்னதாக, காஞ்சி காமகோடி வித்யா மண்டலி சார்பில் 108 பெண்கள் சங்கரமடத்தில், லலிதா  சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தின் அருகில் இருந்து, 108 பெண்கள் பால்குடங்களுடன் காமாட்சி அம்மன் கோவிலுக்கு மங்கல வாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, நவராத்திரி கொலு மண்டபத்தில் 108 சுமங்கலிகளுக்கும் புடவை. மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சக்கான ஏற்பாட்டை காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகாரியம் சுந்தரேச அய்யர், மணியக்காரர் சூரிய நாராயணன், கோவில் ஸ்தானிகர் நடராஜ சாஸ்திரிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மதியம், ஜெயேந்திரர் ப்ளாட்டினம் ஜூப்லி டிரஸ்ட் மற்றும் காஞ்சி காமாட்சி சங்கர மடம் வரவேற்பு குழு சார்பில், சங்கரமடம் நுழைவாயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar