Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... அம்மனின் சேலைகள் ஏலம்; ஆர்வமுடன் அள்ளிச் சென்ற பெண் பக்தர்கள் அம்மனின் சேலைகள் ஏலம்; ஆர்வமுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2024
10:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாநகராட்சி , தாயார் குளம், எம்.ஜி.ஆர்., நகர் கிழக்கு பகுதியில் ரேணுகாம்பாள் கோவிலில், 22ம் ஆண்டு ஆடித்திருவிழா 23ம் தேதி இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது. 


நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு அம்மன் பூங்கரம் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது.  இரவு 9:00 மணிக்கு முத்துவேல் கலைக்குழுவினரின் பம்பை, உடுக்கை, சிலம்பாட்டத்துடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ரேணுகாம்பாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபராதனை காண்பித்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் , விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.


குளக்கரை மாரியம்மன் கோவில்; பெரியகாஞ்சிபுரம், சாலை தெருவில் உள்ள பழமையான குளக்கரை மாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவின் முதல் நாளான நேற்று, உற்சவர் அம்மன், புட்லுார் அங்காளம்மன்போல கர்ப்பிணி பெண் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் அம்மனை தரிசித்தனர். சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.மாலையில் திருவிளக்கு வழிபாடும் நடைபெற்றது. இரண்டாம் நாள் விழாவான இன்று ராதாம்மாள் வரதபிள்ளை அறக்கட்டளை சார்பில் அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.காஞ்சிபுரம் சஞ்சீவி ராஜா சுவாமிகள் ஊக்கத்தொகை வழங்குகிறார். மூன்றாம் நாளான காலை கூழ் வார்த்தல் விழாவும், பொங்கல் வைக்கும் வைபவமும் அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, கூழமந்தல் மாரியம்மன் கோவிலில் காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது. இரவு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மன் வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன் ஆடி மாதம் 10ம் நாளான நேற்று வராஹி அம்மன் அலங்காரத்திலும், பெரிய காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள், சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி, இக்கோவில்களில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar