பதிவு செய்த நாள்
31
ஜூலை
2024
03:07
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை அருகே களரியில் மாரியம்மன் கோயில் உள்ளது. 4 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 17 அன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஜூலை 21 அன்று மாலை முத்து எடுத்தல் நிகழ்ச்சியும், ஜூலை 23 அன்று முத்து பரப்புதல் உள்ளிட்டவைகள் நடந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று களரி விநாயகர் கோயிலில் இருந்து கரகம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது. மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை ஏராளமான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டனர். மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். ஏற்பாடுகளை ஹிந்து சத்திரிய நாடார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் மக்கள் பணி இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
* பெரியபட்டினம் அருகே உள்ள தோப்புவலசையில் மாரியம்மன் கோயிலில் 298 ஆவது ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று மாலை அம்மன் கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தன. இன்று பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தோப்புவலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* பெரியபட்டினம் அருகே இலங்காமணி கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஜூலை 21 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெரியபட்டினம் ஊரணியில் பாரி கங்கை கரைக்கப்பட்டது. முன்னதாக ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. ஏற்பாடுகளை இலங்காமணி கிராம மக்கள் செய்திருந்தனர்.